என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடியரசு தினவிழா"
உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து இந்திய கடற்படை விமான தளத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு விமான தளத்தில் கமாண்டர் வெங்கடேஷ் அய்யர் தேசிய கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து விமான தளத்தில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையுடன் முதல்முறையாக பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
விழாவில் விமாள தள கமாண்டர் வெங்கடேஷ் அய்யர் பேசியதாவது:-
கடற்படை வீரர்களுடன் சேர்ந்து குடியரசு தினவிழா கொண்டாடும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.நாட்டின் எதிர்காலம் மாணவர்களாகிய உங்கள் கையில் உள்ளது. கடற்படை வீரர்களுடன் மாணவர்களாகிய நீங்களும் அணிவகுப்பில் கலந்துகொண்டது மேலும் உங்களை ஊக்கப்படுத்தும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு சிறந்த மனிதர். அவரை பின்பற்றி மாணவர்களும் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கமாண்டர் கோசாவி மற்றும் உச்சிப்புளி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த 4 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும்,ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற் படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் டார்னியர் விமானத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
பீகார் மாநிலம் கோபால்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று குடியரசு தினவிழா நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் பைகுந்த்பூரில் உள்ள அரசு அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அருகில் உள்ள உயர்அழுத்த மின்கம்பியில் கொடி கம்பம் உரசியதால், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றிவைத்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர் மறைந்த லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருதினை, அவரது மனைவி மற்றும் தாயிடம் ஜனாதிபதி வழங்கினார்.
இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படை வீரர்கள் மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர். முதல் முறையாக பாவனா கஸ்தூரி என்ற பெண் அதிகாரி தலைமையில் ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அதிநவீன டி90 பீஷ்மா ரக டாங்கி மற்றும் கே 9, வஜ்ரா-டி பீரங்கிகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் பங்கேற்றன.
இதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. மதுரையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த அலங்கார ஊர்தியில், மகாத்மா காந்தியின் தமிழக வருகையை குறிக்கும் வகையில் அவரது சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. மதுரையில் உள்ள ஏழைகளை பார்த்து, அவர்களைப் போன்றே எளிய உடைக்கு காந்தி மாறிய தகவலும் இந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்தது. இதுதவிர, மதுரை மீனாட்சியம்மன் கோவில், உழவர்கள் எளிய ஆடையுடன் ஏர் உழும் காட்சியும் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. #RepublicDay #TableauxShowcase
டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இருநாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார்.
இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருந்ததாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிரில் ரமாபோசா தெரிவித்தார். #CyrilRamaphosa #RepublicDay
புதுடெல்லி:
டெல்லியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பயங்கரவாதிகள் புகுந்து நாச வேலையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி போலீசார் கடந்த சில நாட்களாகவே தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
சமீபத்தில் மத்திய டெல்லியின் ராஜ்கத் பகுதியில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பயங்கரவாதி பிடிபட்டான். அவன் பெயர் அப்துல் லத்தீப் கானாய் என்ற உமைல் என்ற திலாவர். போலீசார் அவனை கைது செய்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பதுங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தற்போது பிடிபட்ட லத்தீப் என்பதும் தெரிய வந்தது.
ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது போல் டெல்லி குடியரசு தின விழாவிலும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் விசாரணையின் போது தெரிவித்தான்.
பயங்கரவாதி லத்தீப்பிடம் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் டெல்லி தாக்குதலுக்காக காஷ்மீரில் கையெறி குண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தான். அதன்பேரில் போலீசார் காஷ்மீருக்கு விரைந்து சென்று 2 கையெறி குண்டுகளை கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக காஷ்மீரின் பந்திபோராவைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி ஹிலால் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். இவன் டெல்லி வந்து பல இடங்களுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கு நோட்டமிட்டு சென்றுள்ளான்.
பயங்கரவாதி லத்தீப் கைது செய்யப்பட்ட தகவல் காஷ்மீர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவன் கைது செய்யப்பட்டதன் மூலம் டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
இதற்கிடையே கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த 2006-ம் ஆண்டு இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக 2-வது முக்கிய குற்றவாளியான முகமத் அசார் என்பவன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டான்.
சவுதி அரேபியாவில் பதுங்கி இருந்த இவன் டெல்லி திரும்பிய போது அதிகாரிகள் விசாரணையின் போது குண்டு வெடிப்பில் தேடப்பட்டவன் என்பதை கண்டுபிடித்தனர். இவன் தலைச்சேரியை சேர்ந்தவன்.
கடந்த 2003-ம் ஆண்டு கேரளாவின் மராட் பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் கோழிக்கோடில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக அசார் தெரிவித்துள்ளான். இவனும் மற்ற இரு குற்றவாளிகளான யூசுப், நசீர் ஆகியோர் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
2006 மார்ச் மாதம் 3-ந் தேதி கோழிக்கோடில் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் ஒரு குண்டும், கால்வாயில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 2-வது குற்றவாளி சிக்கியுள்ளான். #RepublicDay
குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கவும் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை, காமராஜர் சாலை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடும் நபர்களை பிடித்து விசாரித்து அதுபற்றிய தகவலை உடனே தலைமையிடத்துக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வேறு பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்து வருவதை உளவுப் பிரிவினர் கண்டறிந்து 12 பேரை கைது செய்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #Marinabeach #RepublicDay
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக தலைநகர் டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க இந்தியாவில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை இரு வாரங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தேசிய விசாரணை குழுவினர் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.
அப்போது உத்தரபிரதேசத்தில் ஒரு புதிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாசவேலைகளில் ஈடுபட தயாராகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கூண்டோடு சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி, மும்பை நகரங்களிலும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். அவர்களது பெயர் மொகீன்கான், சல்மான்கான், தகீன்கான், பகத்ஷா, ஜமீன்குத்படி, முகமது மாசார்ஷேக், சர்ப்ரஷ் அகமது, ஜாகித் ஷேக் என்று தெரிய வந்தது. மற்றொருவர் 17 வயதான மைனர் ஆவார். இவர்கள் அனைவரும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த 9 பேரில் 4 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள். 5 பேர் மும்புரா பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள், விஷ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. விஷப்பாட்டில்கள்தான் அதிக அளவில் இருந்தன.
அவர்கள் 9 பேரையும் மும்பை போலீசார் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டது தெரிய வந்தது.
அதோடு உத்தரபிரதேச மாநிலத்திலும் அவர்கள் கைவரிசை காட்ட சதி திட் டம் தீட்டி இருந்தது அம்பலமானது. இதையடுத்து அவர்களில் 8 பேர் அவுரங்காபாத் கோர்ட்டில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 5-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. 17 வயது இளைஞர் மைனர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
கும்பமேளாவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வருகிறார்கள். மார்ச் மாதம் வரை இந்த கும்பமேளா நடக்கிறது. இடையில் ஏதாவது ஒருநாள் கும்பமேளா பகுதிக்கு சென்று உணவு மற்றும் தண்ணீரில் விஷத்தை கலந்து அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்து இருந்தனர்.
இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் பணம் மற்றும் பொருட்களை வழங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பின்னால் இருந்து இயக்கியது யார் என்பது பற்றிய விசாரணையை மும்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். #ISMilitants
ஆலந்தூர்:
குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து பொது மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் பார்வையாளர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 31-ந் தேதி வரை பார்வையாளர்கள் தடை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்